2025 ஜனவரி 15, புதன்கிழமை

வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

Simrith   / 2025 ஜனவரி 15 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தொடங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் பல ஜன்னல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், அதேவேளையில் இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸ் விசாரணைகளில், ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் இளைய மகனின் பெயரைக் கூறி, இனந்தெரியாத ஆயுததாரிகள் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எனினும் இளைய மகன் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக பொலிஸ் அறிக்கை கூறுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X