2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

வாடிக்கையாளரை தாக்கிய மூவர் கைது

Editorial   / 2024 டிசெம்பர் 25 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெக்கிராவ நகரிலுள்ள ஹோட்டலுக்குச் சென்றிருந்த  வாடிக்கையாளர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூவரை கெக்கிராவ பொலிஸார் கைது செய்துள்ளனர்

கெக்கிராவ மஹா வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளருக்கும் ஹோட்டல் முகாமையாளருக்கும் இடையில் நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து ஹோட்டல் முகாமையாளர் உட்பட மூன்று ஊழியர்கள் குறித்த வாடிக்கையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த நபர் கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகளால் உடனடியாக தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெக்கிராவ திப்பட்டுவெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X