2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

’வாக்களிக்குமாறு இரந்து கேட்க முடியாது’

Freelancer   / 2024 செப்டெம்பர் 20 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறு முக்கிய விடயங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதனடிப்படையில்,    வாக்களிக்குமாறு இரந்து கேட்டல,  எவரேனும் தேருநரின் வாக்கைப் பரிந்து கேட்டல்,  குறிப்பிட்ட எவரேனும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென்று எவரேனும் நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல்,  தேர்தலில் வாக்களிக்க வேண்டாமென்று நேருநரை தூண்டி வசப்படுத்த முயலுதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் தொடர்பான, (யாதேனும் அலுவலக முறையிலான துண்டுப் பிரசுரம், ஒட்டு விளம்பரம், சுவரொட்டி, புகைப்படம், சித்திரம் அல்லது அறிவித்தல் எதனையும் தவிர்ந்த) யாதேனும் நுண்டுப் பிரசுரம், ஒட்டு விளம்பரம், சுவரொட்டி, புகைப்படம் அல்லது சித்திரம் அல்லது அறிவித்தல் அல்லது எவரேனும் வேட்பாளருக்கு குறித்தொதுக்கப்பட்ட சின்னம் எதனையும் விநியோகித்தல் அல்லது காட்சிக்கு வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தண்டனைக்குரிய குற்றமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .