2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ரூ.80 இலட்சம் வைப்பிலிட்ட அசாத் சாலி

Editorial   / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மையத்தில், நிதி நிறுவனம் நடத்தி, பல்வேறான நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்த பெண், நாட்டிலுள்ள முக்கியமான ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறையொன்றை வாடக்கைக்கு எடுத்து, ஒன்றரை வருடங்கள் தங்கியிருந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் 250 கோடி ரூபாய் வைப்பிலிட்டுள்ளதாக இதுவரையிலும் எட்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிதி நிறுவனத்தில் அசாத் சாலி, 80 இலட்சம் ரூபாய் வைப்பிலிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், பல வர்த்தகர்கள் 70 கோடி ரூபாயை வைப்பிலிட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X