Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று (09) கட்டளையிட்டார்.
ரிஷாட் எம்.பியின் வீட்டில் பணிப் பெண்ணாகக் கடமையாற்றிய ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமி எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
தனது சேவை பெறுநர்கள், கட்டார் நாட்டில் இடம்பெறவுள்ள செயலமர்வு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று அவர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, மன்றுக்கு அறிவித்தார்.
இதன் காரணமாக, அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீக்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், மேற்குறிப்பிட்ட அனுமதியை வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
29 Apr 2025