2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

ரஷ்ய சுற்றுலா பயணி கடலில் மூழ்கி உயிரிழப்பு

Editorial   / 2025 ஜனவரி 10 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணி கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 65 வயதுடைய கரிசன் ஓ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த நபர் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (10) காலை பாசிக்குடா கடலில் நீராடிய போது கடல்மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்ததை அவதானித்த  அங்கு இருந்த கடற்படையினர் உடனடியாக செயல்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X