Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 01, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 மார்ச் 26 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சாங்கை வியாழக்கிழமை (26) அன்று கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
"இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருடன், எமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, புனித ரமலான் மாதத்தில், காசா மக்கள் எதிர் கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பிலும் எமது ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தினோம். " எனவும், மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago