2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

’ரவியின் பெயர் அனுப்பப்பட்டது ரணிலுக்கு தெரியாது’

Freelancer   / 2024 நவம்பர் 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

“புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்காக ரவி கருணாநாயக்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னரே தெரிவித்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி” என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பான அவர் மேலும் கூறுகையில்,

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

 புதிய ஜனநாயக முன்னணியால் முன்னிறுத்தப்படும் வேட்பாளருக்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாக கூறப்படும் கருத்தும் அடிப்படையற்றது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனங்களை நிரப்புவது தொடர்பில் நவம்பர் 19ஆம் திகதியன்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட வேண்டுமென ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, அபேவர்தன மேலும் தெரிவித்தார். AN


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X