Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 28, வியாழக்கிழமை
Simrith / 2024 நவம்பர் 21 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை பொதுத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட பயன்படுத்தப்பட்ட புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) எரிவாயு சின்ன வேட்பாளருக்கு தேசியப் பட்டியல் இடம் வழங்குவதற்கு தேர்தல் உடன்பாடு இருந்ததாக அதன் உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்த கூற்றுக்களை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இன்று மறுத்துள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்ற தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான வேட்பாளர்களை தீர்மானிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நவம்பர் 16ஆம் திகதி புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் கூட்டம் நடத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அக்கூட்டத்தில் நவம்பர் 19-ம் திகதி மீண்டும் கூடி இறுதி முடிவு எடுக்க முடிவு செய்யப்பட்டது.
புதிய ஜனநாயக முன்னணி உடனான தேர்தல் ஒப்பந்தத்தின் பிரதியும் அன்று சமர்ப்பிக்கப்பட இருந்தது.
நவம்பர் 18 அன்று, NDF செயலாளர் ஷியாமலா பெரேரா, திரு விக்கிரமசிங்கவைச் சந்தித்தபோது, திரு கருணாநாயக்கவை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆனாலும், திரு. விக்கிரமசிங்க அவரைப் பரிந்துரைக்க மறுத்துவிட்டார்.
அதனையடுத்து திட்டமிடப்பட்ட அடுத்த கூட்டத்திற்கு முன்னதாக, திரு கருணாநாயக்கவின் பெயரை முன்மொழிவதற்கு திருமதி பெரேரா நடவடிக்கை எடுத்ததுடன், அந்த பெயரை வர்த்தமானியில் வெளியிடுவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இது தேசிய பட்டியல் வேட்பாளர் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஒப்பந்தத்தின் பிரதி அடுத்த நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், ஆனால் அசல் ஆவணத்தின் சில பக்கங்களைக் காணவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசியப் பட்டியலில் எவரையும் முன்னிறுத்துவதற்கு NDF க்கு உரிமை இல்லை என்று கூறிய திரு. அபேவர்தன, முதலில் எட்டப்பட்ட புரிந்துணர்வுக்கு முரணாக திருமதி ஷியாமலா பெரேரா செயல்பட்டதாகக் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் என்ற வகையில், நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக திரு கருணாநாயக்க ஒழுக்காற்று நடைமுறைக்கு உட்படுத்தப்படுவார் என திரு. அபேவர்தன கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago