Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கரையோர ர யில் மார்க்கத்தில், கொள்ளுப்பிட்டிய நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று தடம் புரண்டமையால், தனி வழியிலேயே ரயில்கள் பயணிக்கின்றன.
ஆகையால், கரையோர ரயில் மார்க்கத்தின் ஊடாக கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகள் மாற்று போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துமாறு, ரயிவே பொது முகாமையாளர்( செயற்பாடுகள்) டீ.எஸ் பொல்வத்தகே தெரிவித்தார்.
தனி வழியில் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால், கொழும்புக்குள் நுழையும் ரயில்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையால், கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில்கள் சில இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்கள் பல மணிநேரம் தாமதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago