2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

ரணிலுக்கு எதிரான விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்

Freelancer   / 2025 மார்ச் 10 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றை விசாரிக்கும் மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்திலிருந்து விலகுவதாக நீதியரசர் மேனகா விஜேசுந்தர அறிவித்துள்ளார். 

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய நீதியரசர்களுக்கான வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காததன் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூன்று நீதியரசர்களை கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 

அதன்போது, ஆயத்தின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர வழக்கிலிருந்து விலகியதால், இந்த மனுவை எதிர்வரும் மே 9 ஆம் திகதி அவர் இல்லாத நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .