2025 பெப்ரவரி 26, புதன்கிழமை

ரணிலை கழித்தால் 950 ரூபாவே கிடைக்கும்

Freelancer   / 2025 பெப்ரவரி 26 , மு.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அரச  ஊழியர்களுக்கு இந்த அரசாங்கத்தால் 8250 ரூபாவே  சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்  ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படவுள்ள 5950ரூபாவிலும் 5ஆயிரம் ரூபா ரணில் விக்ரமசிங்க மார்ச் மாதம் வரை வழங்கியது . அதனை கழித்தால் 950 ரூபாவே அரச ஊழியர்களுக்கு இந்தவருட சம்பள அதிகரிப்பாக கிடைக்கிறது. ஏப்ரல் மாத சம்பளம் கையில் கிடைக்கும்போது அரசாங்கத்தின் சம்பள  அதிகரிப்பை  அரச ஊழியர்களுக்கு தெரியவரும்  என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலரும் எம்.பி.யுமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்கிகிழமை (25) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழாம் நாள் விவாதத்தில்   உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

 மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதுவரை எந்த மாற்றத்தையும் செய்ய வில்லை. ஆனால் அவர்கள் கடந்த அரசாங்கங்களின் கொள்கைக்கு மாறிவிட்டனர்  தனியார் மயப்படுத்தல் வெளிநாட்டு முதலீடுகளுக்கு எதிரான  நிலைப்பாட்டியேலே இருந்தனர். ஆனால் இன்று தனியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் தற்போது தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் எனத்  தெரிவிக்கி்ன்றனர்.நெவில் பெர்ணாந்து பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தற்போது நாட்டில் தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர் 

இது இவ்வாறு இருக்கத்தக்க விரைவில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்கட்டண சூத்திரத்தை மக்கள் சார்பானதாக மாற்றியமைப்போம் என தெரிவித்திருந்தனர். எதிர்காலத்தில்  மின்கட்டணம் அதிகரிக்கப்படும் என அறிவிப்பை விடுவதில் பிரச்சினை எழுந்துள்ளது.  

இவ்வாறு மின்கட்டணம் மேலும் அதிகரிக்கும் போது இது புதிய முதலீடுகளுக்கும் பொதுமக்களும் பாதிப்பை ஏற்படுத்தும். இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன்  என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .