2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

யாழில் வித்தியாசமான போராட்டம்

Editorial   / 2025 ஜனவரி 16 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம்  யாழ். நகர்ப்பகுதியில் வியாழக்கிழமை (16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. 

வடக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. 

ஆரம்ப நிகழ்வு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து யாழ். நகர் பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்று விட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக் காட்டும் முகமாக வீதியை கூட்டுதல், குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன. 

தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X