Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை
Freelancer / 2024 டிசெம்பர் 27 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கைதடி மேற்கு, கைதடியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நவரத்தினம் தனுசன் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் 24 ஆம் திகதி முற்பகல் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை (26) பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago