Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2024 மே 30 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
நகைகள் என்றால் ஆசையே இல்லாத பெண்கள் இருக்கவே மாட்டார்கள். அதிலும், தங்க நகைகள் என்றால் சொல்லவா வேண்டும். பிறந்த நாள் முதல், ஆடி 18 வரையும் நகைகள்தான் கேட்பார்கள் பரிசாக,
அவ்வாறான கதைகளை கேட்க, பேருந்து நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகளுக்கு முன்பாக நின்றுக்கொண்டிருக்க வேண்டும். வியக்கத்தக்க பல கதைகள் கிடைக்கும். நினைத்து நினைத்து சிரிப்பதா? அழுவதா? என மனம் தடுமாறி போய்விடும்
வியாழக்கிழமை (30) நேரம் காலை 8 மணியிருக்கும் பலரும் வரிசையாக நின்றுக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரினதும் கைகளில் வண்ணவண்ண குப்பிகள் இருந்தன. இன்னும் சிலர் அமர்ந்திருந்தனர்.
நாற்காலிகளில் அமர்ந்திருந்தவர்கள் நகர, நகர நின்றிருப்பவர்கள் அமர்ந்துகொள்ளவேண்டும். அனைவரும் ஏதோவொரு நோய்க்கு உள்ளாகியுள்ளனர். இரத்த பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆய்வுக்கூடத்துக்கு வந்திருந்தனர்.
தங்களுடைய உறவினர்களுடன் வந்திருந்தவயதானவர்கள் ஓரமாய் அமர்ந்திருக்க, வரிசையில் உறவினர்கள் நின்றுக்கொண்டிருந்தனர்.
பெரும்பாலும் சிங்களம், தமிழ் மொழிகளில் பேசுபவர்களே இருந்தனர். உறவினர்களுடன் வருகைதராமல், தனித்து வந்த நோயாளர்கள் சில மயங்கி விழுந்துவிட்டனர். ஏனெனில், இரத்த பரிசோதனைக்கு வரும்போது உணவு, ஆகாரம் எதுவுமே உண்ணாமலே வரவேண்டும்.
வயோதிபர்கள், மயங்கியவர்களுக்கு அங்கிருந்தவர்கள் பலர் உதவிகளைச் செய்து, வரிசையில் நிற்கவிடாது, முன்கூட்டியே செல்வதற்கு இடமளித்தனர்.
அக்கா, எங்க இங்க.. என்றொரு குரல் கேட்டது.
அமர்ந்திருந்தவர்களில் இருவர் சம்பாஷணையில் ஈடுபட்டனர்.
மணியாட்டியும் போனை கிளறுவதைப் போலவே காதை கொடுத்தார்.
முதலாவது பெண்: ஓடா பாருங்களே இரத்தம் கொடுக்க வந்தேன்.
இரண்டாவது பெண்: அப்படியா, நானும்தான் இரத்தம் கொடுக்கதான் வந்தேன்.
முதலாவது பெண்: காலையிலேயே வந்துட்டேன், பக்கத்துவீட்டு மனிசியும் வந்ததால, ஓட்டோவில வந்துட்டேன், போக எத்தனை மணியாகுமோ தெரியல,
இரண்டாவது பெண்: ஏன்டா, அவருங்க எங்க?, நம்ப தேவியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சொல்லுறீங்க.
முதலாவது பெண்: ஆமா, அவ மூக்குத்தி குத்தியிருக்கா தானே, மூக்குத்துயில் இருந்த சுரை கழன்று, மூக்குக்கு உள்ளே சென்றுவிட்டது.
வீட்டில இருந்தவர்கள், மல்லாக்க படுக்கவைத்து அந்த மூக்குல ஏதாவது போட்டு கிளறிவிட்டாங்க,
இப்ப மூக்குத்தி மூக்குக்கு உள்ளே குறுக்காக இருப்பதாக சொல்லுறாங்க.
இரண்டாவது பெண்: இப்ப நம்ப ஏன்? இங்க இருக்கோம், அதுக்குக்கு அதுக்கு ஆள் இருக்கு டொக்டர் வேலையை நாம செய்யமுடியாது. பாவம், போறப்ப பாத்துட்டு போவம் என
ஆங்… ஆங்… இஸ்ஸராட்ட யன்ட, யன்ட எனக் கூறவே, வரிசையில் இருந்தவர்கள் இரத்தத்தை கொடுத்து விட்டு கிளம்பிவிட்டனர்.
கேட்டுக்கொண்டிருந்த மணியாட்டி, எல்லாத்துக்கும் கை வைத்தியம் சரிவராது என நினைத்துக்கொண்டு, வண்ணவண்ண குப்பிகளை கொடுத்து இரத்தத்தையும் கொடுத்தார்.
மணியாட்டி,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
7 minute ago
29 minute ago