2025 மார்ச் 15, சனிக்கிழமை

முல்லைத்தீவு முகாம் தடுப்பு மையமானது

Editorial   / 2024 டிசெம்பர் 31 , பி.ப. 02:14 - 0     - 140

இலங்கை விமானப்படை முல்லைத்தீவு முகாமை "தடுப்பு மையமாக" பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை (30) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு அமைச்சர்  ஆனந்த விஜேபாலவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டது.முல்லைத்தீவு விமானப்படைத் தளம் தடுப்பு முகாமாக செவ்வாய்க்கிழமை (31) முதல் இயங்கவுள்ளது.

கடற்படையினரால் அண்மையில் மீட்கப்பட்ட 103 மியான்மர் அகதிகள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமுக்கு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த போதிலும், மிரிஹான தடுப்பு முகாமில் போதிய தங்குமிட வசதிகள் இல்லாததால், இந்த அகதிகளை முல்லைத்தீவு விமானப்படைத் தளத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .