Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 23 , மு.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
நாட்டில் அமுல்படுத்தப்படும் மின் துண்டிப்புகளால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ரமேஷ பத்திரண, இதன் காரணமாக மின் துண்டிப்பு தொடர்பான தெளிவான கால அட்டவணையொன்றை முன்வைக்குமாறு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், எனினும், இந்த நிலை எதிர்வரும் நாள்களில் சீராகும் என தான் நம்புவதாகவும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டால் உரிய முறையில் அறிவித்ததன் பின்னரே குறித்த கால அட்டவணைக்கு அமைய மின் துண்டிப்பு முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்கும் நிதி வசதிகளை வழங்குவது குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த நிறுவனங்கள் இரண்டுக்கும் தேவையான நிதி வசதிகளை வழங்குவற்கான கடன் பத்திரத்தை விநியோகிப்பதற்கு தேவையான பின்னணியை ஏற்படுத்துமாறு மத்திய வங்கிக்கு ஜனாதிபதியால் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago