Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 31 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நப்தா கையிருப்பு இல்லாமையால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மூலம் இலங்கை மின்சார சபைக்கு 600 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மின்சார கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்க இது வழி வகுக்கும் எனவும் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
மின்சார சபைக்கு ஏற்பட்ட நட்டம் ரூபா 600 மில்லியனாக இருந்தால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 650 மில்லியனுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஒரு லீற்றர் டீசலை விட நாப்தாவின் விலை 35 ரூபாய் குறைவு என்றும் உலை எண்ணெய் விலை 60 ரூபாய் குறைவு எனவும் குறிப்பிட்டார்.
எனினும், எரிசக்தி அமைச்சரும் அமைச்சின் அதிகாரிகளும் நாட்டை அபிவிருத்தி செய்வதாகக் கூறி உலை எண்ணெய் மற்றும் நப்தா பாவனையை நிறுத்தியதாக அவர் கூறினார்.
இலங்கையில் மாத்திரம் எரிபொருளின் விலை 85 வீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த பாலித, உலகளாவிய எரிபொருள் விலையின் அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விலை உயரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
ஊழலுக்கு மத்தியில் நாட்டை நிர்க்கதியான நிலைக்குத் தள்ளும் வகையில் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாவும் வாழ்க்கைச் செலவும் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர், இந்த அதிகரிப்புக்கு காரணமான அமைச்சர் தற்போது பல்வேறு காரணங்களை முன்வைத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago
9 hours ago