2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மின்கட்டண அதிகரிப்பு குறித்த தீர்மானம்

Freelancer   / 2022 மார்ச் 16 , பி.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்க மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் மின்சக்தி அமைச்சில் இன்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டதுடன், இன்றைய கலந்துரையாடலின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .