2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மாணிக்கற்களை விற்க முயற்சித்த பிக்கு உட்பட மூவர் கைது

Mayu   / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரூ.370 மில்லியன் பெறுமதியான இரண்டு நீல நிற மாணிக்க கற்களை விற்பனை செய்ய முயற்சித்த பிக்கு ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்லந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிக்கு வெலிவேரிய பிரதேசத்தில் வசித்துவருவதோடு, மற்றைய சந்தேக நபர்கள் 72 வயதுடையவர் எனவும்,  பிரபல அரசியல் கட்சியொன்றின் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X