2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவி கூட்டு வன்புணர்வு ; ஐவர் தடுத்து வைப்பு

Janu   / 2024 ஜூன் 23 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹன்வெல்ல, எம்புலகம பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில், 5 இளைஞர்கள் சனிக்கிழமை (22) கைது செய்யப்பட்டதாக நுகேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல, நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த 21 முதல் 24 வயதுக்குட்பட்ட ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி பொசன் பொஹோயா தினத்தன்று (வெள்ளிக்கிழமை 21) காலை தனது சித்தியுடன் அன்னதானத்திற்கு சென்று , தான் புத்தக கடைக்கு செல்வதாக கூறி காதலனை சந்திக்க சென்றுள்ளதாகவும்

காதலனை சந்தித்து விட்டு, வீடு திரும்பிய மாணவியை, மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐவர் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்று ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தகனசாலையொன்றுக்கு அழைத்துச் சென்று கூட்டு வன்புணர்வு செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவர் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .