Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை
Editorial / 2023 நவம்பர் 10 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவி ஒருவர் வௌ்ளிக்கிழமை (10) காலை இரண்டு மாத்திரைகளை விழுங்கியதால் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலபிட்டிய மரதான பிரதேசத்திலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலப்பிட்டிய ரேவத கல்லூரியில் கல்வி கற்கும் வலிமுனி டினுஜி மௌவிஸ்ம மென்டிஸ் (வயது 13) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த சிறுமி வீட்டில் இருந்து இரண்டு மருந்து மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாகவும், அவற்றை பயன்படுத்தியதால் மாணவி உயிரிழந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (10) பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி திருமதி கே.கவாகராச்சியினால் நடத்தப்படவிருந்தது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago