2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

மாவீரர் விவகாரத்தில் ஏன்? இரட்டை நிலைப்பாடு

Freelancer   / 2024 டிசெம்பர் 05 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் மாவீரர்களை  நினைவுகூர்ந்த சிவாஜிலிங்கம் தண்டனை சட்டக் கோவையின் கீழ்  கைது செய்யப்படுகிறார். மாவீரர்களை  நினைவுகூர்ந்ததை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள் தெற்கில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04)  நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரைமீதான  இரண்டாம் நாள்  விவாதத்தில் உரையாற்றுகையிலேயே  இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
   
கடந்த பாராளுமன்றத்தில்    225 உறுப்பினர்களும் திருடர்கள் என்று  முத்திரை குத்தப்பட்டார்கள் . ஆகவே உண்மையான திருடர்களை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. ஆட்சிக்கு வந்தவுடன்  முன்னாள் ஜனாதிபதிகளின்  சிறப்புரிமைகளை இரத்து செய்வதாகவும்,  பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளை இரத்து செய்வதாகவும், குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால்  சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவின் மனைவி  அரசாங்கத்தில் உள்ளார்.

இனவாதத்திற்கு இடமில்லையென  அரசாங்கம் கூறுகின்றது. இனவாதத்தை இல்லாதொழிக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன். இனவாதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்க கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

ஆனால் வடக்கில் சிவாஜிலிங்கம் தண்டனை சட்டகோவையின் பிரகாரம் கைது செய்யப்படுகிறார். தெற்கில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இவ்வாறான கைதுகளின் போது சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறுங்கள் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .