2025 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

மீளாய்வின் பின்னர் எம்.பிக்களுக்கு பாதுகாப்பு

Freelancer   / 2025 பெப்ரவரி 24 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு மீளாய்வின் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் அரசாங்கம் மீது அண்மை காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் போதுமானளவு பாதுகாப்பை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவால் சபாநாயகருக்கு எழுத்துமுலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X