2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மலசலக்கூடத்துக்குள் புகைப் பிடித்த மாணவிகள்

Editorial   / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மலசலக்கூடத்துக்குள் மாணவிகள் மூவர் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது கையும் களவுமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு மாணவிகளே இவ்வாறு புகைப்பிடித்துள்ளனர்.  பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினர், அந்த மூவரின் பெற்றோர்களையும் அழைத்து, கடுமையாக எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த மாணவிகள் மூவரில், ஒரு மாணவியின் தந்தை வீட்டுக்கு சிகரெட்டுகளை வாங்கிவந்துள்ளார். அதிலிருந்து இரண்டொன்றை எடுத்து வந்த மாணவியே இவ்வாறு புகைப்பிடித்துள்ளார்.

புகைப்பிடித்த மாணவிகளின் பெற்றோர், பாதுகாப்பு பிரிவு மற்றும் அரச பணியாளர்கள் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் உண்மையானது என்பதுடன் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று அப்பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X