Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது நாட்டின் பல பகுதிகளில் கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, தற்போதைய பற்றாக்குறை காரணமாக இந்த அரிசி வகைகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அதன்படி, சில பகுதிகளில், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசி 310 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கிரம் சம்பா அரிசி 270 ரூபாய் முதல் 290 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
பல பகுதிகளில், கடை உரிமையாளருக்கு மிக நெருக்கமான வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த விலையில் கூட அரிசி வாங்க முடியும், மேலும் அரிசி வாங்குவதற்கான ரசீதுகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
ஒரு ‘பில்’ கோரப்படும்போது, 'மற்றவை' என்று குறிப்பிடும் பில் வழங்கப்படுகிறது, இதன் விளைவாக, நுகர்வோர் அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டதாகக் கூறி நுகர்வோர் விவகார அதிகாரசபையில் புகார் அளிக்க முடியவில்லை.
அரிசி கட்டுப்பாட்டு விலையின்படி, ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி ரூ.10க்கு விற்கப்பட வேண்டும். 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசி 260 ரூபாய்க்குமு் விற்கப்பட வேண்டும். இருப்பினும், உள்ளூர் சம்பா அல்லது கீரி சம்பா இந்த விலையில் சந்தையில் கிடைப்பதில்லை என்றும் அறியமுடிகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago