Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 06 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயது 05 மாத சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மாமா ஒருவரை மொனராகலை பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ள சம்பவம், மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரேகெட்டிய தலாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் சுமார் நான்கு வருடங்களாக சிறுமியின் வீட்டில் வசித்து வருவதாகவும், தனது தாயும் சகோதரியும் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது மாமா தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தாயிடம் கூறியதையடுத்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ மற்றும் அதிகாரிகள் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago