2025 மார்ச் 06, வியாழக்கிழமை

மேர்வினுடன் மேலும் ஆறு பேர் கைது

Simrith   / 2025 மார்ச் 06 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பிரதேச சபைக்குச் சொந்தமான 0.2137 ஹெக்டேயர் நிலத்திற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து ரூ. 75 மில்லியன் மோசடி செய்ததற்காக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) தெரிவித்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் மேர்வின் டி சில்வா,  பத்தரமுல்லையில் உள்ள பெலவத்தை பகுதியில் வைத்து புதன்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டார்.

இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .