2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

மாமனாரின் தாக்குதலில் மருமகன் பலி

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை -  தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மருமகன் உயிரிழந்துள்ளதாக, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மருமகனின் தலையில் அடிபட்டதன் காரணமாகவே, அவர் உயிரிழந்துள்ளதாக, பலாங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், பலாங்கொட - தம்மானையை சேர்ந்த 44 வயதுடைய மிகஹவெல லெக்மிலகே விஜேகுமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை என   பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் வீட்டுக்கு அவரது மனைவியின் தாயும் தந்தையும் வந்திருந்தனர். அப்போது மனைவிக்கும், குறித்த நபருக்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டின் வரவேற்பறையில் வைத்து மனைவியின் தந்தை குறித்த நபரை அடித்ததால்  அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரை தாக்கிய 65 வயதுடைய சந்தேக நபரான மாமாவை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X