2025 ஜனவரி 15, புதன்கிழமை

மோப்ப நாயுடன் சுற்றிவளைப்பு; 102 பேர் ஹட்டனில் சிக்கினர்

Freelancer   / 2025 ஜனவரி 14 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவமும் ஹட்டன் பொலிஸாரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, ​​பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டுவந்த 102 நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹட்டன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் பிரணதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹட்டன், வட்டவல, கினிகத்தேன, பொல்பிட்டிய, நோர்டன் பிரிட்ஜ், நல்லத்தண்ணி, மஸ்கெலியா, நோர்வூட் மற்றும் பொகவந்தலாவை பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள், இராணுவத்தினருடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (12) இரவு 7 மணி முதல் 10 மணி வரை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவு நாய் பிரிவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது. போக்குவரத்து விதிகளை மீறிய 67 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 02 பேர், சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் மதுபானம் பயன்படுத்திய 13 பேர் மற்றும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் ​கொள்ளாத20 பேர் மீது ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர்  குறிப்பிட்டுள்ளார்.  

இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு நடவடிக்கைப் படையினரை உள்ளடக்கிய இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X