2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

முன் விரோத தகராறு: ஒருவர் பலி

Mayu   / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கத்தியால் தாக்கி  காயங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக திங்கட்கிழமை (25) ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு  கொல்லப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வடுல்லாவத்தை பிரதேசத்தில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு அருகில் இருந்ததாகவும், அவ்விடத்திற்கு வந்த சந்தேக நபர் உயிரிழந்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் குத்தியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் சந்தேக நபரை கத்தியால் காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயி​ரிழந்தவர் கொலன்னாவ, சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (வயது 50) என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: கொழும்பு வடக்குப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சமரபாலவின் ஆலோசனையின் பிரகாரம் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச். ஹரிசன் தலைமையில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி, பொலிஸ் பரிசோதகர் நிஷங்க விஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .