Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 27 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி அஸ்கிரிய திலக் ரத்நாயக்க மாவத்தையில் வளர்ந்திருந்த அரச மரம் மற்றும் மனோரஞ்சிதம் மரம் ஆகிய இரண்டு மரங்களும் முறிந்து விழுந்தமையால், அந்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி உள்ளிட்ட எட்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மாநகரில் புதன்கிழமை (27) முற்பகல் 11 மணியளவில் பெய்த கடும் மழையினால், பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக, பொலிஸ் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திரும்பும் முற்சந்தியில் இருந்த இவ்விரு மரங்களும் ஒரே நேரத்தில் வீதியில் சரிந்துவிட்டுள்ளது.
அப்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி, கண்டி தேசிய வைத்திசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர். அந்த வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏனைய ஏழு வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த மரங்களின் வேர்கள் செத்துவிட்டதாக அதிகாரிகளின் கவனத்துக்கு தாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்திருந்தோம் என அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
33 minute ago
44 minute ago