Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் கடத்தல்காரரைக் கொல்வதற்காக மாறுவேடமிட்டு கடத்தல்காரரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அது நிறைவேறாமையால், அவரது மனைவி மற்றும் மனைவியின் தாயாரைக் முழந்தாலிடச் செய்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பொருட்களை கொள்ளையடித்த, ஏ.எஸ்.பி. புனைப்பெயரால் அழைக்கப்படும் குற்றவாளி உட்பட நால்வர் சில மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டதாக மொரட்டுமுல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களுடன் திருடப்பட்ட தங்க நகைகள், கைத்தொலைபேசிகள், கொள்ளைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதங்கள், இரும்பு கம்பி, பாதுகாப்பு தலைக்கவசங்கள், மாறுவேடத்தில் பயன்படுத்திய ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொரட்டுமுல்ல வில்லோரவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரை கொலை செய்வதற்காக கடந்த 6ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சந்தேகநபர்கள் வீட்டிற்கு வந்து முன்பக்க கதவைத் தட்டியுள்ளனர். கதவைத் திறக்க மறுத்ததால் சமையலறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளனர்
அப்போது, கடத்தல்காரர் வீட்டில் இல்லாததால் மாறுவேடத்தில் வந்திருந்தவர்கள் கடத்தல்காரரின் மனைவி மற்றும் மனைவியின் தாயாரை மண்டியிட வைத்து தங்க ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் மற்றும் 23,000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களுக்குள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மொரட்டுமுல்ல பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பிரதான சந்தேகநபரை மொரட்டுவ பஸ் நிலையத்தில் வைத்து கைதுசெய்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் ஏ.எஸ்.பி எனப்படும் புனைப்பெயரால் அழைக்கப்படும் குற்றவாளி என்றும் மற்றைய சந்தேக நபர்கள் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களை மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மொரட்டுமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சந்திரசிறியின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
8 hours ago