Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஒக்டோபர் 21 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை ஆசிரியையாக இருந்த தனது மனைவி மற்றும் தூங்கிக் கொண்டிருந்த, மூன்று வயதான மகன் மற்றும் ஒரு மாத மகன், ஆகியோரின் கழுத்துகளை நெரித்து கொன்று எரித்த வழக்கில் தனியார் நிறுவன நிர்வாக அதிகாரி ஒருவருக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
வேறு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன். அவர், இந்த குற்றங்களை புரிந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக அம்பலமானது.
ரத்மலானையை வசிப்பிடமாகக் கொண்ட குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணை சாட்சியங்கள் மற்றும் விஞ்ஞான ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தியதன் பின்னரே கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது.
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டவர், செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், வேண்டுமென்றே குற்றம் புரிந்துள்ளதாக நிருபித்து, மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து.
மேல் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து 38 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பை அறிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து.
இரத்மலானை கொலுமடம சந்தி பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவனமொன்றின் நிறைவேற்று அதிகாரியான விஜேமுனி மதுர மனுரங்க டி சில்வா (43) என்பவருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் பி. குமரன்ரத்தினம் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது.
கல்தெமுல்ல, இரத்மலானை, கொலுமடம சந்தியில் வசிக்கும் மனைவியான சச்சேதன சண்டமாலி பெர்னாண்டோ (29), விஜேமுனி இஷான் சானுக டி சில்வா (03), மற்றும் குஷான் சண்டாரு டி சில்வா (01 மாதங்கள்) இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் படுக்கையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.
2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய நாளன்று வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தலைமையில் வழக்கு நெரிப்படுத்தப்பட்டிருந்தது. நீதிபதி விக்கும் களுஆராச்சி இந்த தீர்ப்பை வழங்கினார்.
சம்பவம் நடந்த போது 31 வயதான குற்றம் சாட்டப்பட்டவர், படிக்கும் போது சந்தித்த நீர்கொழும்பில் உள்ள சர்வதேச பள்ளியின் ஆசிரியை ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தார் என்பது உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தெரியவந்ததாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஒரு பாடப்பிரிவில், அவருடன் காதல் உறவு வைத்திருந்த சர்வதேச பாடசாலை ஆசிரியையை திருமணம் செய்யும் நோக்கில், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டது மேல் நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்ததாக தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago