Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 23 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனைவியை கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, அந்த உடல் பாகங்களை குக்கரில் வேகவைத்து பின்னர் ஏரியில் வீசி அப்புறப்படுத்தியவரின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. 45 வயதான இவர் முன்னாள் இராணுவ வீரர். தற்போது ஹைதராபாத்தில் டிஆர்டிஓவில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது மனைவிவேங்கட மாதவி (35) ஜனவரி 16-ஆம் திகதி காணாமல் போனார். அவர் காணாமல் போனது தொடர்பாக பொலிஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது அவர்களுக்கு கணவர் குருமூர்த்தி மீது சந்தேகம் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸார் குருமூர்த்தியிடம் கடுமையாக விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் குருமூர்த்தி சொன்ன தகவல் காவல் துறையினரையே கதிகலங்க வைத்துள்ளது. குருமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், “நான் என் மனைவியை கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை வீட்டின் கழிவறையில் வைத்து துண்டு துண்டாக வெட்டினேன். உடலை குக்கரில் வேகவைத்தேன். பின்னர் அவற்றை மீராபேட் ஏரியில் வீசினேன்” என்றார். அவர் கூறிய தகவலை உறுதி செய்ய பொலிஸார் ஆதாரங்களைத் தேடி வருகின்றனர்.
குருமூர்த்தி - மாதவி தம்பதிக்கு ஆண், பெண் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்தத் தம்பதி அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள் என்று அக்கம்பக்கத்தினரும் உறுதி செய்த நிலையில், குருமூர்த்தி வாக்குமூலத்தின் படியே கொலை நடந்ததா என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். எனினும், குருமூர்த்தி சொன்ன கொலைத் தகவல்களே அதிர வைப்பதாக உள்ளதால், இந்தக் குற்றச் செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago