2025 மார்ச் 15, சனிக்கிழமை

மனித வர்த்தகம் : கல்முனை தந்தைக்கு கடும் தண்டனை

Freelancer   / 2025 மார்ச் 10 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2008அம் ஆண்டு சிறுமி ஒருவரை போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையை தயாரித்து, ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பியதாகக் கூறப்படும் பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது. 

மனித கடத்தலில் சிக்கிய மைனர் பெண்ணுக்கு ரூ.25,000 அபராதமும், ரூ.300,000 இழப்பீடும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். 

இவற்றை செலுத்தப்படாவிட்டால், மேலும் ஒன்றரை ஆண்டுகள் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க உத்தரவிட்டார். 

கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் காதர் சரீப் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட சிறுமி வெளிநாடு சென்ற இரண்டு மாதங்களுக்குள் அவர் பணிபுரிந்த வீட்டுக்காரர்களால் சித்திரவதைக்கு ஆளானதாகவும், பின்னர் அவர் தாய் நாட்டிற்கு திரும்பியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

2008ஆம் ஆண்டு நாட்டுக்கு திரும்பிய இந்த சிறுமி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்தக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என்றும், இந்தத் தீர்ப்பை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் உத்தரவிட்டார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .