2024 நவம்பர் 28, வியாழக்கிழமை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலமானார்

Janu   / 2024 நவம்பர் 28 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரரும், முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் காலமானார்.

கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களின் அன்புக்குப் பாத்திரமானவராக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் உள்ளார். இனவாதம், மதவாதம்,பிரதேசவாதமற்ற மூத்த அரசியல்வாதியும் ஆவார். மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அரசியலில் ஒன்றாக பயணித்து முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தனித்துவ அரசியல் கட்சி தேவை என முஸ்லிம் சமூகத்தை விழிப்படையச் செய்தார். அதில் வெற்றியும் கண்டவராவார்.

முஸ்லிம்  தமிழ் ஆகிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் சில விட்டுக்கொடுப்புகளுடன் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்நதுடன் வடகிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த காலத்தில் தமிழ் தலைவர்களுடனும் தமிழ் மக்களுடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் அக்கரைப்பற்றில்  காலமானார்.

  பாறுக் ஷிஹான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X