2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு

J.A. George   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

களனி பிரதேச செயலக அதிகார வரம்புக்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலர், இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X