2025 மார்ச் 06, வியாழக்கிழமை

மன்னாரில் கட்டுப்பணத்தை செலுத்தியது SLFP

R.Tharaniya   / 2025 மார்ச் 06 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை வியாழக்கிழமை (6) மதியம்  செலுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய தீப் லொக்கு பண்டார இணைந்து கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,நானாட்டான் பிரதேச சபை ,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் பிரதேச சபை  தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமையினால்  மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையிலே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மன்னார் மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளது.

 

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .