2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மனுசவிடமிருந்து புதிய யுக்தி

Freelancer   / 2024 ஒக்டோபர் 12 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் மனுஷ நாணயக்கார, அரசியல் பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது தேர்தல் ஒலிப்புத்தகத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக காலி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அவரது  தேர்தல் பிரச்சாரத்தில் புத்தம் புதிய அணுகுமுறையையில்  ஒலிப்புத்தகம்  (audio leaflet)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இந்த  ஒலிப்புத்தகம் எதிர்காலத்தில் டிஜிட்டல் ஊடகத்தளங்கள் மூலம் விநியோகிக்கப்படும். இது அவரது வாக்காளர்களை தொடர்பு கொள்ள மிகவும் திறமையான வழிமுறை யாகும்.

இவ்வாறான சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில்நுட்பத்தை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளில் வழமையாக காணப்படுகின்ற போதிலும் இலங்கையில் இவ்வாறானதொரு விடயம் காணப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

பார்வையற்றோர் அரசியல் பிரச்சாரத்திற்கு  ஒலிப்புத்தகத்தைப் பயன்படுத்துதல்  மற்றும் வெவ்வேறு கல்வியறிவு நிலைகளைக் கொண்ட மக்களை அதே வழியில் தொடர்புகொள்ளலாம். எனவே, இது அவரது  அரசியல் செய்தியை இலகுவாக விநியோகிக்கவும், மேலும் திறமையாக சமூகமயமாக்கவும் முடியும்.

கடதாசிப்  பயன்பாட்டைக் குறைக்க ஒலிப்புத்தகங்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு உகந்த வழியாகும். இது இலங்கை அரசியலில் பசுமைக் கருத்துருவின் ஆக்கப்பூர்வமான அறிமுகமாகும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .