2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மித்தெனிய முக்கொலை: இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்

Editorial   / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.பி.கபில

மித்தெனிய பொலிஸ் பிரிவில், பெப்ரவரி (18) ஆம் திகதியன்று நடந்த மூன்று கொலைகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்க, இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, வௌ்ளிக்கிழமை(25) அன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவர் உஸ்வேவகெதர, டெபொக்காவ பகுதியைச் சேர்ந்தவர், மேலும் இந்த மூன்று கொலைகளுக்கு மேலதிகமாக, கொலை, கைக்குண்டுகளை வைத்திருத்தல் மற்றும் ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள் வைத்திருந்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக மித்தெனிய, ஊருபொக்க, வலஸ்முல்ல மற்றும் மித்தெனிய ஆகிய மாத்தறை பிரிவுகளில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேக நபராவார்.

இந்த மூன்று கொலைகளில், விதானகமகே அருண பிரியந்த, அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று போலியான பெயரில் அங்கு தங்கியிருந்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையால் நாட்டிற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, வௌ்ளிக்கிழமை (25) அன்று கட்டுநாயக்கவிற்கு நாடு கடத்தப்பட்டார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .