2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

மூதாட்டி கொலை: முன்னாள் இராணுவ சிப்பாய் கைது

Freelancer   / 2025 பெப்ரவரி 08 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றில், மூதாட்டியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை தீ வைத்து எரித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர், ராகம பொலிஸாரால், சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் ராகம, தலகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என, பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் கடந்த 05 ஆம் திகதி ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ள நிலையில், அங்கிருந்த 76 வயதுடைய மூதாட்டி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .