2025 மார்ச் 21, வெள்ளிக்கிழமை

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி

Freelancer   / 2025 மார்ச் 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணிப்பூரின் பதற்றமான சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹ்மர் மற்றும் சோமி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதையடுத்து, நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குக்கி பழங்குடின பிரிவின் உள்பிரிவான ஹமர்ஸ் மற்றும் சோமி இடையே சமீபகாலமாக மோதல் நிலவிவருகிறது. கடந்த 16 ஆம் திகதி இரவு, ஹமர் தலைவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு சமூகங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக, சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் மாலையில் சோமி குழு ஒன்று தங்கள் சமூகக் கொடியை ஏற்ற முயன்றபோது, அதனை ஹ்மர்ஸ் குழு எதிர்த்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் சூரசந்த்பூர் நகரின் புறநகரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X