2025 ஜனவரி 10, வெள்ளிக்கிழமை

மண்ணெண்ணெய் அருந்திய குழந்தை மரணம்

Freelancer   / 2025 ஜனவரி 10 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்று ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது.

கோப்பாய் மத்தி, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தர்சிகன் சஸ்வின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று மதியம் தாயார் சமையல் செய்துகொண்டு இருந்தவேளை குறித்த குழந்தை மண்ணெண்ணெய்யை எடுத்துக் குடித்துவிட்டு, உடலிலும் பூசிவிட்டு விளையாடிக்கொண்டிருந்ததது. இதை அவதானித்த தாயார் குழந்தையைத் தூக்கினார். அப்போது குழந்தை மயக்கமடைந்தது.

பிற்பகல் ஒரு மணியளவில் அந்தக் குழந்தை கோப்பாய் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் பிற்பகல் 4 மணியளவில் உயிரிழந்துள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X