Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Editorial / 2024 நவம்பர் 12 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பம்பலப்பிட்டி மசாஜ் நிலையத்திற்கு வந்த வைத்தியரை மிரட்டி 10 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவை இணையவழியில் கொள்ளையடித்த சம்பவத்தில் நான்கு சந்தேக நபர்கள், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12) அடையாளம் காட்டினார்.
அடையாளம் காணும் நடவடிக்கை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இடம்பெற்றதுடன் சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்திற்கு ஆதரவளித்ததாக கூறப்படும் மக்கள் போராட்டக் கூட்டணியின் கொழும்பு மாவட்ட பெண் வேட்பாளர் மற்றும் அவரது கணவரை இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர் இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்ட போட்டியிடும் பெண் வேட்பாளர், அவரது கணவருமான அதுல் முதலிகே சமிந்த புஸ்பகுமார ஆகியோராவார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுதாரக தேவப்பிரிய, மொஹமட் சதீப் யூசுப், ராஜபக்சவின் அஷேன் ஹசரங்க மற்றும் திமுத்து எரங்க ஆகிய நான்கு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டனர்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து பம்பலப்பிட்டி பொலிஸார் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடத்தல்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கல்கிஸையில் வசிக்கும் சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பன நிலையம் பம்பலப்பிட்டியில் உள்ள வாடகை வீடொன்றில் இணைய செயலி (ஆப்) மூலம் நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த இடத்திற்கு இணையம் ஊடாக நியமனங்களை முன்பதிவு செய்து சேவை வழங்குவதற்காக வந்த வைத்தியரை மிரட்டி 10 இலட்சம் ரூபாவும் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் நால்வருக்கு ஆதரவாக செயற்பட்ட வேட்பாளரையும் அவரது கணவரையும் கைது செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணி சுரங்க பண்டார ஆஜரானார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கியதுடன் ஏனைய சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago