2025 மார்ச் 06, வியாழக்கிழமை

மோசடி விளம்பரங்கள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை

Simrith   / 2025 மார்ச் 06 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறிய முதலீடுகளுக்கு கணிசமான நிதி வருமானத்தை வங்கி வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி விளம்பரங்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி (CBSL) கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த ஏமாற்று விளம்பரங்கள், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் படங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன என்பதை CBSL எடுத்துக்காட்டியது.

டிஜிட்டல் தளங்களில் தோன்றும் இந்த ஜோடிக்கப்பட்ட விளம்பரங்கள், மத்திய வங்கி ஒரு சிறிய தொகையை முதலீடு செய்யும் நபர்களுக்கு பெரிய தொகையை செலுத்துவதாக தவறாகக் கூறுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .