2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

மசாஜ் நிலையம் சென்ற சிறுமி பெண்களால் துஷ்பிரயோகம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு பெண்களை குருநாகல் தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகலில் கலப்புப் பாடசாலையில் கல்வி கற்கும் சிறுமி, 9ம் திகதி பிற்பகல் தனியார் வகுப்பிற்குச் செல்வதாகக் கூறிய நிலையில், குறித்த இரு பெண்களும் சிறுமியை மசாஜ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது இரண்டு இளம் பெண்களும் சேர்ந்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

இந்த துஷ்பிரயோகத்தால் உடல் உபாதைகளுக்கு உள்ளான சிறுமி, பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த மசாஜ் ஸ்தாபனங்கள் முறையாக இயங்கப்படவில்லை எனவும், பாலுறவு நடவடிக்கைகளை வழங்குவதற்காக இவ்வாறான மசாஜ் நிறுவனங்கள் இயங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குருநாகல் நகரில் ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவு செய்யப்படாமல், கம்பனி சட்டத்தின் கீழ் மட்டும் பதிவு செய்யப்பட்ட சுமார் 60க்கும் மேற்பட்ட மசாஜ் நிறுவனங்கள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன.

ஒரு சில நிறுவனங்களே முறையான முறைப்படி நடத்தப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இவ்வாறான மசாஜ் நிலையங்களை சோதனையிட நடவடிக்கை எடுத்தமைக்காக குருநாகல் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் தம்ம சன்னக்க கோப்பேவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவம் குறிப்பிடப்படுகின்றது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .