2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மகளை நிர்வாணமாக படமெடுக்க முயற்சி: கணவனை வெட்டிக்கொன்ற மனைவி

Editorial   / 2023 டிசெம்பர் 04 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி  வெட்டிக் கொன்ற சம்பவம்  வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலை உதவியாளராக பணியாற்றிய 37 வயதுடைய வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டின் குளியலறையில் மறைந்திருந்த  கணவன் மீது மனைவி, மிளகாய்ப் பொடியை வீசியதாகவும், மிளகாய்ப் பொடி தாக்குதலுக்கு உள்ளானவர், வெளியே வந்த போது, மனைவி வெட்டிக் கொன்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு இலக்காகி வீட்டின் வரவேற்பறையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் சமீபத்தில் யூடியூப் சேனலை தொடங்கி, பெண்களின் நிர்வாண புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அதை பிரபலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வந்தது பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .