Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Janu / 2025 மார்ச் 03 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய தனது தந்தை கொண்டு வந்த ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்ஃபோன்களை அணிந்துகொண்டு, சென்ற அவரது மகன் பலியான சம்பவம் அம்பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹெட்ஃபோன்களை அணிந்து கொண்டு
தனது தொலைபேசியில் பாடலைக் கேட்டுக்கொண்டே சென்றபோதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான சேர்க்கை படிவங்களில் கையெழுத்திட இந்த மாணவன் ஞாயிற்றுக்கிழமை (02) மதியம் அம்பலங்கொடையில் கடலோர ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போதே ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக அம்பலங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த மாணவர் துசுது சந்தீப் ஆவார், அவர் தற்போது காலியில் உள்ள ஒரு பிரதான பாடசாலையில் படித்து வருகிறார், தற்போது அம்பலாங்கொடையில் வசிக்கிறார்.
அம்பலாங்கொடை கண்டேகொடை ரயில் நிலையத்திற்கும் அம்பலாங்கொடை தர்மசோக கல்லூரி நீச்சல் தடாகத்துக்கும் அருகிலுள்ள ரயில் கடவைக்கும் இடையில் அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ராஜரட்ட ராணி ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட இரண்டு ஹெட்ஃபோன்களை அவனுக்குக் தந்தை கொடுத்திருந்தார், மேலும் அவன் அவற்றைக் காதுகளில் மாற்றிக்கொண்டதன் பின்னர் அவனைச் சுற்றி எதுவும் கேட்காதபடி இருந்துள்ளன, அவன் அவற்றை அணிந்துகொண்டு சென்ற போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago