2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

மாகாண சபைத் தேர்தல் வேட்புமனு தாக்கல்: அடுத்த வாரம் கலந்துரையாடல்

Freelancer   / 2024 நவம்பர் 29 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல், அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் தீர்மானங்களே எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அடிப்படையாக அமையும் என, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தமாகியிருந்த போதிலும், திறைசேரியின் நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் அவை பிற்போடப்பட்டது.AN

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .